Page Loader
விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' படத்தில் இணைந்தார் மலையாள நடிகர் சித்திக் 

விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' படத்தில் இணைந்தார் மலையாள நடிகர் சித்திக் 

எழுதியவர் Sindhuja SM
Apr 21, 2024
01:37 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல மலையாள நடிகர் சித்திக், விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தில் நடிக்க உள்ளார். இன்று இது குறித்து ஒரு போஸ்டரை வெளியிட்ட இந்த படத்தின் பட குழுவினர், நடிகர் சித்திக் இப்படத்தில் நடிக்க போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது விக்ரம் மற்றும் சித்திக் ஆகியோர் இணைந்து நடிக்க இருக்கும் முதல் திரைப்படமாகும். சித்திக்கின் கதாபாத்திரம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விக்ரமின் 58வது பிறந்தநாள் அன்று அறிவிக்கப்பட்ட இப்படத்தை எஸ்.யு.அருண் இயக்குகிறார். மலையாள சினிமாவில் ஒரு முக்கிய நடிகரான சித்திக், தமிழ் திரையுலகிற்கு புதியவர் அல்ல. 1996 இல் அர்ஜுன் சர்ஜா நடித்த சுபாஷ் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் கோலிவுட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகம் 

 'காளி' என்ற அச்சமற்ற கேங்ஸ்டராக நடிக்க இருக்கும் விக்ரம் 

ஜீவா நடித்து 2022இல் வெளியான ரொமான்ஸ் காமெடி திரைப்படமான 'வரலாறு முக்கியம்' என்பதில் அவர் சமீபத்தில் நடித்திருந்தார். 'வீர தீர சூரன்' திரைப்படத்தில் சித்திக்கை தவிர சுராஜ் வெஞ்சரமூடு என்ற மற்றொரு மலையாள நடிகரும் நடிக்க உள்ளார். ஆனால், இப்படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திர விவரங்கள் உள்ளிட்ட பிற விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை. விக்ரம், 'காளி' என்ற அச்சமற்ற கேங்ஸ்டராக இப்படத்தில் நடிக்க போகிறார் என்பது இப்படத்தின் தலைப்பு வெளியீட்டு வீடியோவின் மூலம் தெரியவந்தது. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

 'வீர தீர சூரன்' படத்தில் இணைந்தார் மலையாள நடிகர் சித்திக்