'ஜவான்' படத்தின் 'வந்த எடம்' பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது
இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள படம் 'ஜவான்'. இதில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாரா, சஞ்சய் தத், பிரியாமணி, யோகிபாபு, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார், ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி இந்த திரைப்படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிளான, 'வந்த எடம்' பாடல் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இப்பாடலின் மேக்கிங் வீடியோவினை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஏரளாமானோர் நடனம் ஆடுவது, ஷாருக்கானிற்கு அட்லீ தமிழ் சொல்லிக்கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.