த்ரிஷா நடிப்பில் 'தி ரோடு' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தி ரோடு'. புதுமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கும் இந்த திரைப்படம், நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்ற ஆண்டு, த்ரிஷாவின் பிறந்தநாள் அன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து இன்று மாலை, படத்தின் எஸ்க்ளுசிவ் மேக்கிங் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த திரைப்படத்தில், 'சர்பட்டா பரம்பரை' பட புகழ் 'டான்சிங் ரோஸ்' ஷபீரும் நடிக்கிறார். இவர்களுடன், மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் பிரதான காட்சிகள் மதுரையில் காட்சிப்படுத்தப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.