Page Loader
விஷாலின் 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு தளத்தில் நடந்த பெரும் விபத்து; வைரலாகும் வீடியோ
'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு தளத்தில் நடந்த பெரும் விபத்து

விஷாலின் 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு தளத்தில் நடந்த பெரும் விபத்து; வைரலாகும் வீடியோ

எழுதியவர் Venkatalakshmi V
Feb 22, 2023
04:26 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஷால் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் தான் 'மார்க் ஆண்டனி'. நடிகர் விஷாலின் 33வது படமான இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பு தளத்தில், ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது, படத்தின் செட்டிங்கை உடைத்து கொண்டு ஒரு வண்டி, கட்டுப்பாடில்லாமல் விரைந்து வந்தது போல இருக்கிறது காட்சிகள். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், நாயகியாக ரிது வர்மா, மற்றும் முக்கிய வேடத்தில், எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். இந்த படத்தை, ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு தளத்தில் விபத்து