
இன்று Netflix-இல் வெளியாகிறது மஹாவதார் நரசிம்மா!
செய்தி முன்னோட்டம்
விஷ்ணுவின் கடைசி அவதாரங்களில் ஒன்றான நரசிம்மாவை மையமாகக் கொண்டு, அவரது தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம் தான் 'மகாவதார் நரசிம்மா'. அஸ்வின் குமார் இயக்கிய இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் சாம் சி.எஸ். ஹோம்பாளே பிலிம்ஸ் மற்றும் கினிம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த இந்த படம், ஜூலை 25 அன்று திரைக்கு வந்தது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மதியம் 12: 30 மணியளவில் நெட்ஃபிலிக்சில் வெளியாகிறது. இதனை அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The roar of this lion can topple a kingdom 🦁💥
— Netflix India (@NetflixIndia) September 18, 2025
Watch Mahavatar Narsimha, out 19 September, 12:30 PM, on Netflix. #MahavatarNarsimhaOnNetflix pic.twitter.com/vmdsAiw8e7
வசூல்
பாக்ஸ் ஆபிசில் வசூல்
தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற இந்த அனிமேஷன் படம், வசூலிலும் பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தி மொழியில் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்தி மொழியில் இதுவரை எந்த ஒரு அனிமேஷன் படமும் இந்த அளவு வசூலித்தது இல்லை. இதுவே முதன்முறையாகும். அதேபோல, மற்ற மொழிகளில் வந்த வசூலையும் சேர்த்து, இப்படம் மொத்தம் ரூ. 210 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Netflix-இல் இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்தில் வெளியாகவுள்ளது.