Page Loader
'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

எழுதியவர் Nivetha P
Oct 17, 2023
11:48 am

செய்தி முன்னோட்டம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் 19ம்.,தேதி திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. அதன்படி, திரைப்படம் ரிலீஸாகும் 19ம்.,தேதி முதல் 24ம்.,தேதி வரை மட்டுமே சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதே போல் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு தான் துவங்க வேண்டும், இறுதி காட்சி நள்ளிரவு 1.30 மணியோடு முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்திற்கான சிறப்பு காட்சிகளை அதிகாலை 4 மணிக்கே திரையிடவும், 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட வேண்டும் என்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'செவன் ஸ்க்ரீன்' சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றினை தொடுத்தது.

வழக்கு 

தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் - நீதிபதி 

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, இதன் விசாரணையை அக்.,17ம் தேதிக்கு ஒத்திவைத்து நேற்று(அக்.,16) உத்தரவிட்டார். இதன்படி இந்த வழக்கு இன்று(அக்.,17) முதல் வழக்காக சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி அனிதா சுமந்த் முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், "திரைப்படம் வெளியாகும் முதல் நாள், அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கமுடியாது" என்று அறிவித்தார். மேலும், 9 மணி சிறப்பு காட்சிக்கு பதில் 7 மணி சிறப்பு காட்சிக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அனுமதி கோரலாம் என்றும், தமிழக அரசு அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அதே போல் இதற்கான உத்தரவினை தமிழக அரசு நாளை(அக்.,18) மதியத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.