'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்
செய்தி முன்னோட்டம்
ஞானவேலு இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து 2021ம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'.
இது ஒடுக்கப்பட்ட சமூகத்தினை சேர்ந்த ராஜ்கண்ணு என்பவர் காவல்நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்தும், முன்னாள் நீதியரசர் சந்துருவின் சொந்த வாழ்வில் அரங்கேறிய சம்பவங்களையும் கொண்டு அதனடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இதனிடையே இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், படத்தில் குறவர் சமூகத்தினை இழிவுபடுத்தும்படி காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது என்று கூறப்படுகிறது.
குறவர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவரான முருகேசன் இந்த வழக்கினை தொடர்ந்துள்ளார்.
விசாரணை
வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அதில் அவர் படக்குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் என்று தெரிகிறது.
இவரின் கோரிக்கை காரணமாக சென்றமுறை நடந்த இந்த வழக்கின் விசாரணையில் இப்படத்தின் இயக்குனர் ஞானவேல் மற்றும் நாயகன் சூர்யா உள்ளிட்டோரை எதிர்மனுதாரர்களாக இணைக்க நீதிபதி ஆர்.ஹேமலதா உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று(ஆகஸ்ட்.,22) இந்த வழக்கின் விசாரணை நடந்தது.
இயக்குனர் ஞானவேல் மற்றும் நாயகன் சூர்யா ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு குறித்து சென்னை காவல்துறை மற்றும் இவர்கள் இருவரும் 2 வார கால அவகாசத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.