உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன் அளித்த சென்னை உயர்நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
நேற்று, பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர், விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டதை அடுத்து, அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளார்.
அவரின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி திலகவதி, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
காவல்துறையினர் விசாரணைக்கு அழைக்கும் போது ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் நிபந்தனை விதித்தார் நீதிபதி.
அறியாதவர்களுக்கு, விடுதலை சிகப்பி சில தினங்களுக்கு முன், நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கம் ஒன்றில், 'மலக்குழி மரணங்கள்' என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.
அதில், இந்து மத கடவுள்களான ராமர், சீதை, ஹனுமான் போன்றோரை அவமதிக்கும் வகையில் இருந்ததாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன்
#JUSTIN விடுதலை சிகப்பிக்கு நிபந்தனை முன்ஜாமீன்#ViduthalaiSigappi #PaRanjith #ChennaiHighCourt #News18TamilNadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/iChSXJB7Ig
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 10, 2023