
மீண்டும் சிக்கலில் சிக்கிய விஷால்; 15 கோடி ருபாய் டெபாசிட் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஷால், படத்தயாரிப்பிற்காக, பைனான்சியர் அன்புச்செழியனிடம், ரூ. 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.
இதனிடையே, அந்த கடனை அடைக்க, லைகா நிறுவனம் முன்வந்தது.
அதற்கு பதிலாக, கடனை திரும்ப செலுத்தும் வரை, விஷால் பிலிம் பாக்டரி தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையை, தங்களுக்கே தருமாறு ஒரு ஒப்பந்தமும் போடப்பட்டது, லைகா.
அதன் அடிப்படையில், லைகா நிறுவனமும், அன்புச்செழியனிடம் வாங்கப்பட்ட பணத்தை, விஷால் சார்பாக தந்தது.
ஆனால், ஒப்பந்தத்தை மீறியதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு, விஷாலின் மீது, மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது லைகா நிறுவனம். அந்த வழக்கு விசாரணையின் முடிவில், விஷால், 15 கோடி ரூபாய், உடனடியாக கோர்ட்டில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது
விஷால்
விஷால் படங்களுக்கு தடையா?
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த விஷால் தரப்பு, தான் கடனை அடைக்கவே படங்களில் நடித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதிகள், 3 வாரங்களில், 15 கோடி ரூபாயை வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது.
அது தவறும் பட்சத்தில், விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை திரையரங்குகளிலோ, OTT தளங்களிலோ வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
தற்போது, விஷாலின் அடுத்தகட்ட நகர்வு என்ன என, சினிமா வட்டாரம் காத்திருக்கிறது.
தற்போது விஷால், மார்க் ஆண்டனி மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.