Page Loader
பிரபல பாப் பாடகி மடோனா ICUவில் அனுமதி; பாக்டீரியா தொற்றால் பாதிப்பு என தகவல்
பிரபல பாப் பாடகி மடோனா ICUவில் அனுமதி

பிரபல பாப் பாடகி மடோனா ICUவில் அனுமதி; பாக்டீரியா தொற்றால் பாதிப்பு என தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 29, 2023
12:46 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல பாப் இசைப்பாடகி மடோனா. அவருக்கு வயது 64. கடந்த சனிக்கிழமை, பாக்டீரியா தொற்றிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மடோனா, தற்போது வரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, அவரின் மேனேஜர் கை ஓசிரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவின்படி, பாடகி மடோனா தீவிர நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் சில நாட்கள் அனுமதிக்கப்பட வேண்டி இருந்தது எனவும், தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளது எனவும், இருப்பினும் அவர் முழுதாக தேறி வரும்வரை, அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், அவரின் உடல் நலம் பெற ரசிகர்கள் பிராத்தனை செய்யுமாறும் தெரிவித்துள்ளார்.

Instagram அஞ்சல்

பாப் பாடகி மடோனா ICUவில் அனுமதி