Page Loader
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், சர்வதேச நீச்சல் போட்டியில், 5 தங்கப்பதக்கங்கள் வென்றார்; பிரபலங்கள் வாழ்த்து
மகன் வேதாந்தத்துடன் நடிகர் மாதவன்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், சர்வதேச நீச்சல் போட்டியில், 5 தங்கப்பதக்கங்கள் வென்றார்; பிரபலங்கள் வாழ்த்து

எழுதியவர் Venkatalakshmi V
Apr 17, 2023
03:06 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிரபலமான நடிகர் மாதவன். ஆனால், இவரது மகன் வளர்ந்து வரும் நீச்சல் வீரர் ஆவர். ஏற்கனவே பல சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் அவர் கலந்து கொண்டு, பல பதக்கங்களை வென்றுள்ளார். இதனிடையே, மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு, 50, 100,200,400 மற்றும் 1500 மீட்டர் போட்டிகளில், 5 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். தன்னுடைய மகன், இந்தியா சார்பில் கலந்து கொண்டு, நாட்டுக்காக பதக்கம் வென்ற தருணத்தை பெருமையாக கருதுவதாக, மாதவன் ட்விட்டரில் பதிவிட்டார். அவரின் பதிவுக்கு, பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் போன்றோர், வேதாந்திற்கும், மாதவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் மாதவனின் பதிவு 

ட்விட்டர் அஞ்சல்

நடிகை குஷ்புவின் வாழ்த்து 

ட்விட்டர் அஞ்சல்

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து 

ட்விட்டர் அஞ்சல்

ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து 

ட்விட்டர் அஞ்சல்

ஜெயம் ரவி வாழ்த்து