Page Loader
நயன், மாதவன், சித்தார்த்தின் புத்தம் புதிய கூட்டணி - வைரலாகும் டெஸ்ட் மோஷன் போஸ்டர்
நயன் மாதவன் சித்தார்த் கூட்டணியில் உருவாகும் டெஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டர்

நயன், மாதவன், சித்தார்த்தின் புத்தம் புதிய கூட்டணி - வைரலாகும் டெஸ்ட் மோஷன் போஸ்டர்

எழுதியவர் Siranjeevi
Apr 13, 2023
02:51 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை நயன்தாரா இரண்டு முன்னணி நடிகர்களுடன் இணைந்த டெஸ்ட் படத்தின் முதல் போஸ்டரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோலிவுட் சினிமாவில் விக்ரம் வேதா, இறுதி சுற்று மற்றும் தேசிய விருது வென்ற மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சஷிகாந்த் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மாதவன் நடிக்கிறார். இவர்களோடு சித்தார்த்தும் இணைந்துள்ளார். இதனிடையே இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதாகவும் டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்த படத்தை எடுக்கப்படுவதாகவும் படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

மோஷன் போஸ்டர்