Page Loader
உலக தாய்மொழி தினத்தன்று இணையவழி தமிழ் கல்விக்கான புதிய முயற்சியை தொடங்கிய மதன் கார்கி
இணையவழி தமிழ் கல்விக்கான முயற்சியை தொடங்கிய மதன் கார்கி

உலக தாய்மொழி தினத்தன்று இணையவழி தமிழ் கல்விக்கான புதிய முயற்சியை தொடங்கிய மதன் கார்கி

எழுதியவர் Venkatalakshmi V
Feb 22, 2023
03:03 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தாவான மதன் கார்க்கி, தமிழ் வளர்ச்சிக்காக, 'கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இதன் மூலம் பல புதிய முயற்சிகளை அவர் செய்து வருகிறார். தற்போது, மற்றுமொரு புதிய முயற்சியாக, சர்வதேச தாய்மொழி தினத்தன்று, இணைய வழியில் தமிழ் மொழியை கற்க விரும்புவர்களுக்கு, இரு புதிய திட்டங்களை தனது கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் அறிமுகம் செய்துள்ளார். #எழுது : தமிழ் மொழியை எழுதவும் படிக்கவும்; மற்றும் #குறள்: திருக்குறளை கற்றுக்கொள்ளவும் என இரண்டு பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கவிப்பேரரசு வைரமுத்துவின் மகனான மதன் கார்க்கி, சில வாரங்களுக்கு முன்னர், 'Scriptick' எனப்படும், திரைக்கதைக்கான வங்கியை துவங்கினார்.

ட்விட்டர் அஞ்சல்

புதிய முயற்சியை தொடங்கிய மதன் கார்கி