Page Loader
'விடாமுயற்சி' படம் வெளியாகுமா? லைகா நிறுவனத்திற்கு அடுத்த சிக்கல்
லைகா நிறுவனத்திற்கு அடுத்த சிக்கல்

'விடாமுயற்சி' படம் வெளியாகுமா? லைகா நிறுவனத்திற்கு அடுத்த சிக்கல்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 03, 2024
01:25 pm

செய்தி முன்னோட்டம்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விடாமுயற்சி'. இதன் இறுதிகட்டப் கிட்டத்தட்ட முடிந்த நிலையில், படக்குழுவுக்கு ஒரு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் லைகா நிறுவனம் பெரிய அதிர்ச்சியில் இருக்கிறது. 'விடாமுயற்சி' திரைப்படம் 'பிரேக்டவுன்' என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்பதே பிரச்னைக்கு மூல காரணம். இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், படத்தின் டீஸரில் காட்டப்படும் காட்சிகள் 'பிரேக்டவுன்' படத்தில் உள்ள காட்சிகளுடன் ஒத்துப்போகின்றன. இதையடுத்து, இணையத்தில் பலரும் இதை பகிர்ந்து, கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக, 'பிரேக்டவுன்' படக்குழுவினர் விளக்கம் கேட்டு லைகா நிறுவனத்திற்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ஈமெயில் 

ஈமெயில் விவரங்கள் வெளியாகியுள்ளது

"நமது படத்தின் ரீமேக் என்பதை அறிந்துள்ளோம், இதற்காக 15 மில்லியன் டாலர்கள் (சுமார் 100 கோடி ரூபாய்) வழங்க வேண்டும்" என்று அந்த இ-மெயிலில் குறிப்பிட்டுள்ளனர். இதனால், லைகா நிறுவனம் பெரும் அதிர்ச்சியிலும், சட்டபூர்வமான சிக்கல்களிலும் சிக்கியிருக்கிறது. 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தாமதமாகி, பட்ஜெட் அதிகமாகி பல சிக்கல்களை சந்தித்த நிலையில், இந்த புதிய பிரச்சினை அவர்களுக்கு மேலும் ஒரு சிக்கலை உருவாக்கியுள்ளது. இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ விளக்கத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.