Page Loader
போனி கபூரின் தயாரிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது லவ் டுடே - ஹீரோ யார் தெரியுமா?
ஹிந்தியில் ரீமேக் ஆகும் லவ் டுடே படம்

போனி கபூரின் தயாரிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது லவ் டுடே - ஹீரோ யார் தெரியுமா?

எழுதியவர் Saranya Shankar
Jan 02, 2023
01:33 pm

செய்தி முன்னோட்டம்

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளிக்கு பிறகு இவரின் இரண்டாவது படம் லவ் டுடே ஆகும். இப்படத்தில் கதாநாயகராக இவரே நடித்து இருந்தார். இவருடன் இவானா , ராதிகா, சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். கடந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய ஹிட் கொடுத்து பாக்ஸ் ஆபிசில் 100 கோடி வசூலை ஈட்டியது. இதனையடுத்து இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய போவதாக தற்போது செய்திகள் வந்துள்ளன.

ஹிந்தி ரீமேக்

உத்தமன் பிரதீப் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் வருண் தவான்

ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் லவ் டுடே படத்தின் உரிமையை போனி கபூர் பெற்றுள்ளார். இந்த படத்தில் உத்தமன் பிரதீப் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளார். இவர் பல தென்னிந்திய படங்களின் ரீமேக்கில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிக்க இருக்கும் பிற நடிகை நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை முடிவு செய்த பிறகு படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது. தமிழில் இயக்கிய பிரதீப் ரங்கநாதனே ஹிந்தி ரீமேக்கையும் இயக்குகிறாரா அல்லது வேறு யாராவது இயக்குகிறார்களா என்பதை பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த படம் 2022 இல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியலில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.