'லொள்ளு சபா' ரசிகர்களே, நெட்பிளிக்ஸில் உங்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார்கள் 'லொள்ளு சபா' குழு
90 'ஸ் கிட்ஸ் அனைவராலும் விரும்பி பார்க்க பட்ட நிகழ்ச்சியான 'லொள்ளு சபா', தற்போது மீண்டும் வரவுள்ளது. ஆகஸ்ட் 2003 முதல் ஆகஸ்ட் 2008 வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' நிகழ்ச்சி ஒரு spoof நிகழ்ச்சியாகும். திரைப்படங்களை, ஸ்பூஃப் செய்து அந்த குழு செய்யும் கலாட்டாக்கள் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்பட்டது. தற்போது அந்த குழு, நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் நிகழ்ச்சி மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வரவுள்ளது. 'பிரேக்கிங் பேட்' என்ற அமெரிக்க தொடர், உலகம் முழுக்க ரசிகர்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. லொள்ளு சபா குழு தற்போது அந்த நிகழ்ச்சியை தான் ஸ்பூஃப் செய்ய போவதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. 'ஜோக்கிங் பேட்' என்று பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சியின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.