LOADING...
லோகி - அல்லு அர்ஜுன் கூட்டணி உறுதி! மிரட்டலான டீசருடன் வெளியான 'பொங்கல்' அறிவிப்பு
#AA23 சிறப்பு டீசரையும் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்

லோகி - அல்லு அர்ஜுன் கூட்டணி உறுதி! மிரட்டலான டீசருடன் வெளியான 'பொங்கல்' அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 14, 2026
06:25 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ், தெலுங்கு திரையுலகின் 'ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்கும் தனது புதிய திரைப்பட அறிவிப்பை பொங்கலை ஒட்டி இன்று வெளியிட்டுள்ளார். தற்காலிகமாக 'AA23' மற்றும் 'LK7' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் குறித்த அறிவிப்புடன் ஒரு சிறப்பு டீசரையும் அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். வெளியாகியுள்ள டீசர் வீடியோவில், அடர்ந்த காட்டின் வழியே ஒரு நபர் குதிரையில் செல்வதும், அவைக் கண்டு சிங்கங்கள் மற்றும் ஓநாய்கள் அஞ்சி ஒதுங்குவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்பதை டீசர் உணர்த்துகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

மீண்டும் லோகேஷ் உடன் இணையும் அனிருத்

"சிறந்த கலைஞருடன் இணைவதில் மகிழ்ச்சி, இந்தப் பயணம் மிகப்பெரிய பிளாஸ்ட் ஆக அமையட்டும்" என அல்லு அர்ஜுனைக் குறிப்பிட்டு லோகேஷ் பதிவிட்டுள்ளார். இத்திரைப்படத்திற்கு லோகேஷின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். 'புஷ்பா' திரைப்படத்தை தயாரித்த 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் இத்திரைப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இது லோகேஷ் கனகராஜின் 7-வது படமாகவும், அல்லு அர்ஜுனின் 23-வது படமாகவும் அமைகிறது. தற்போது அல்லு அர்ஜுன் அட்லீ உடன் இணைந்து ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். எடுத்ததாகவும் ஒரு தமிழ் இயக்குனர் அவர் இணைகிறார். இந்தப் புதியக் கூட்டணி தென்னிந்தியத் திரைத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement