Page Loader
இன்ஸ்டாகிராமில் விஜய்! இவரை போல, சமூக ஊடகங்களில் சர்ப்ரைஸ் என்ட்ரி தந்த பிரபலங்களின் பட்டியல்
நடிகர் விஜய்யின் முதல் இன்ஸ்டாகிராம் பதிவு

இன்ஸ்டாகிராமில் விஜய்! இவரை போல, சமூக ஊடகங்களில் சர்ப்ரைஸ் என்ட்ரி தந்த பிரபலங்களின் பட்டியல்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 03, 2023
12:52 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று சண்டே ட்ரீட்டாக, ரசிகர்களுக்கு மிக சர்ப்ரைஸ் தந்தார் நடிகர் விஜய். ஆம், இது வரை சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருந்து விலகி இருந்த தளபதி விஜய், நேற்று மாலை, அதிரடியாக என்ட்ரி தந்தார். 'ஹலோ நண்பா அண்ட் நண்பிஸ்' என குறிப்பிட்டு, லியோ படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கிய சில மணி நேரங்களிலேயே, 3 .9 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களைப் பெற்றார். விஜய்யின் இன்ஸ்டாகிராம் விஜயத்தை, நடிகர் சிம்புவும் வரவேற்றார். இவரை போலவே, கோலிவுட்டில் திடீரென சர்ப்ரைஸாக சமூக ஊடகத்தில் நுழைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மற்ற பிரபலங்களின் பட்டியல்:

Instagram அஞ்சல்

இன்ஸ்டாகிராமில் தளபதி!

சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களோடு நேரடி தொடர்பில் இருக்கலாம்

வடிவேலு: லாக்டவுன் சமயத்தில், ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக, ட்விட்டரில் அடியெடுத்து வைத்தார் 'வைகை புயல்' வடிவேலு. அவ்வப்போது, தனது சமுக வலைத்தளம் மூலமாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஜோதிகா: எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இதுவரை இல்லாத ஜோதிகா, சென்ற ஆண்டு இன்ஸ்டாகிராமில் வருகை தந்தார். தனது ட்ராவல் வீடியோவும், படத்தின் அறிவிப்புகளையும் அவர் அவ்வப்போது பதிவேற்றி வருகிறார். ஷாலினி: நடிகர் அஜித்தை திருமணம் செய்த கொண்ட பிறகு, திரை உலகை விட்டு ஒதுங்கி இருந்த நடிகர் ஷாலினி, சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் கணக்கைத் துவங்கினார். 'தல' அஜித்தை பற்றி செய்திகள் வராதா என எங்கும் ரசிகர்களுக்கு, அவ்வப்போது சுவாரஸ்யமான பதிவுகளையும், புகைப்படங்களையும் பதிவேற்றி வருகிறார் ஷாலினி.