Page Loader
'லியோ' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் 'பிகில்' நடிகர்: லீக்கான சர்ப்ரைஸ் புகைப்படம்
பிகில் படத்திற்கு பிறகு, லியோ படத்தில் விஜய்யுடன் இணைகிறாரா நடிகர் கதிர்?

'லியோ' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் 'பிகில்' நடிகர்: லீக்கான சர்ப்ரைஸ் புகைப்படம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 23, 2023
03:03 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் கதிர், 'லியோ' படத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அந்த செய்திகளின்படி, பிரபல யூடியூபர்களான இர்ஃபான் மற்றும் பிராங்க்ஸ்டெர் ராகுல் இருவரும் தற்போது காஷ்மீரில் உள்ளனர். அவர்கள் 'லியோ' படத்தில் நடிப்பதற்காக அங்கு சென்றிருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது. நேற்று நடந்த நிலஅதிர்வின் போது, இர்பான் தான் நலமாக இருப்பதாக ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவின் கடைசியில், பின்னணியில், லியோ படத்தின் ப்ரொட்யூசர்களுடன், நடிகர் கதிர் உரையாடுவது போல இருந்ததது. இதன் மூலம், 'பிகில்' திரைப்படத்திற்கு பிறகு, விஜய்யுடன், நடிகர் கதிர் இணையப்போகிறார் எனவும், கதிரின் கதாபாத்திரத்தை சீக்ரெட்டாக வைத்துள்ளார் லோகேஷ், ஆனால் அது தற்போது வெளிப்பட்டுவிட்டது எனவும் ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

இர்ஃபானின் வீடியோவில் பிரியா ஆனந்தும், கதிரும்

ட்விட்டர் அஞ்சல்

லியோ தயாரிப்பாளர்களுடன் கதிர்