10 கோடி வியூஸ்களை பெற்ற 'நா ரெடி தான்' பாடல்
'தளபதி' விஜய் நடித்து முடித்து, வெளியீட்டிற்கு தயாராகி வரும் திரைப்படம், 'லியோ'. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தை பற்றி தொடர்ந்து எதிர்பார்ப்பு கூடி வரும் நிலையில், படத்தின் முதல் சிங்கிளான, 'நா ரெடி தான்' பாடல் யுட்யூபில் 10 கோடி வியூஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது. விஜய், அனிருத், அசல் கோளாறு ஆகியோர் பாடிய இந்த பாடல், ரீல்ஸ் உலகில் பிரபலமாக உள்ளது. கண்டங்கள் தாண்டி, பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். இப்படத்தின் ஓடிடி உரிமை, இசை உரிமை என வெளியாகும் முன்பே 350 கோடி வருவாயை எட்டியுள்ளது இந்த திரைப்படம் என செய்திகள் தெரிவிக்கின்றன. 'லியோ' இந்த திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது