Page Loader
LCUவில் இணைய போகிறதா லியோ? கமல் குரலில் வெளியாகப்போகும் லியோ கிலிம்ப்ஸ்
கமல் குரலில் வெளியாகும் லியோ படத்தின் கிலிம்ஸ்

LCUவில் இணைய போகிறதா லியோ? கமல் குரலில் வெளியாகப்போகும் லியோ கிலிம்ப்ஸ்

எழுதியவர் Arul Jothe
Jun 08, 2023
01:48 pm

செய்தி முன்னோட்டம்

தளபதி விஜய் வருகின்ற ஜூன் 22 அன்று 49 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒவ்வொரு வருடமும், அவர் பிறந்தநாளின் சமயம், அவர் நடிக்கும் படம் அல்லது நடிக்க போகும் படம் குறித்த ஏதேனும் அப்டேட்டுகள் வெளியாகும். அந்த வரிசையில், இந்த வருடம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'லியோ' படம் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'லியோ' திரைப்படத்தில், விஜய்யுடன், அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளம்பியுள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத். அனிருத் ஏற்கனவே விஜய்க்கு இவர் பல ஹிட் பாடல்களை தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leo update

லியோ திரைப்படத்தின் கிலிம்ஸ்

'லியோ' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்கியது. அதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு சென்னை வந்த படக்குழுவினர், சமீபத்தில், 2000 நடன கலைஞர்களை கொண்ட ஒரு பாடல் காட்சியை படம் பிடித்துள்ளனர் என்ற செய்தி வைரலானது . இதே ஸ்பீடில் போனால், படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்துவிடும் எனவும், ஆனால், படம் குறித்த அப்டேட் எதுவுமே வரவில்லையே என ஏங்கிய ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. லியோ திரைப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ ஒன்றை, தளபதியின் பிறந்தநாள் அன்று வெளியிட இருப்பதாக தெரிகின்றது. இந்த கிலிம்சில், உலகநாயகன் கமலின் வாய்ஸ்-ஓவர் இடம்பெற்றிருப்பதாக ஒரு தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், LCUவில் லியோ இணைகிறது என்பதும் உறுதியாகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.