Page Loader
அடுத்த வாரம் லியோ அப்டேட்: அனிருத் சொன்ன குட் நியூஸ்
அடுத்த வாரம் லியோ அப்டேட்: அனிருத் சொன்ன குட் நியூஸ்

அடுத்த வாரம் லியோ அப்டேட்: அனிருத் சொன்ன குட் நியூஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 07, 2023
05:45 pm

செய்தி முன்னோட்டம்

தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல்களை தந்து வரும் இசையமைப்பாளர் அனிருத், சமீபத்திய பேட்டி ஒன்றில், 'லியோ' படத்தின் அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'லியோ' படத்தின் அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என கேட்கப்பட்டது. அதற்கான வேளைகளில் தான் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும், அடுத்த வாரம் இதற்கான அப்டேட் வெளியாகும் என அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, விஜய் ரசிகர்களும், அனிருத் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 'லியோ' படத்தின் முதல் பாடலான 'நா ரெடி தான்', பிரபலமானதை தொடர்ந்து, அடுத்த பாடலுக்கு விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

card 2

அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் லியோ 

'லியோ' படத்தை குறித்து, அதில் பணியாற்றியவர்களும், நடித்தவர்களும், இந்த திரைப்படம் நிச்சயமாக பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என ஆருடம் கூறிய நிலையில், அனிருத் இந்த அப்டேட் தந்திருப்பது, படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து கேள்விகளை தற்போது எழுப்பியுள்ளது. ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படம் மற்ற திரைப்படங்களை போல, 4 பாடல்கள் டெம்ப்லேட்டில் அடக்க முடியாது என்று கூறியதை அடுத்து ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இதற்கிடையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இந்த மாத இறுதியில் நடைபெறும் என்றும், மதுரை, திருச்சி, மலேஷியா போன்ற இடங்களில் இந்த விழா நடைபெறும் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவுற்று, வரும் அக்டோபர்-19 இப்படம் திரைக்கு வரவுள்ளது.