
லியோ இசை வெளியீட்டு விழாவை கொச்சியில் நடத்த கேரளா விநியோகஸ்த நிறுவனம் விருப்பம்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்தது.
இருப்பினும் பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாது என அறிவிப்பு வெளியிட்டது.
அந்த அறிவிப்பில், "பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தொடர்ந்து விழாவிற்கான பாஸ் கேட்டு வந்த கோரிக்கைகளாலும், லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்துவதில்லை என்ற முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம்", எனக் கூறியிருந்தனர்.
இந்நிலையில், லியோ படத்தின் கேரள விநியோ உரிமையை கைப்பற்றிய ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம், லியோ இசை வெளியீட்டு விழாவை கொச்சியில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை கொச்சியில் நடத்த விநியோகஸ்த நிறுவனம் விருப்பம்
#LEO Kerala Distributor #SreeGokulam Gopalan is offering to conduct #LeoAudioLaunch in Kochi..
— Ramesh Bala (@rameshlaus) September 27, 2023
Will Team #Leo accept the offer..