Page Loader
லியோ இசைவெளியீட்டு விழா ரத்தானதை தொடர்ந்து ட்ரெண்ட் ஆகும் 'We Stand With Leo' ஹாஷ்டேக்; காரணம் என்ன?
ட்ரெண்ட் ஆகும் 'We Stand With Leo' ஹாஷ்டேக்; காரணம் என்ன?

லியோ இசைவெளியீட்டு விழா ரத்தானதை தொடர்ந்து ட்ரெண்ட் ஆகும் 'We Stand With Leo' ஹாஷ்டேக்; காரணம் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 27, 2023
07:45 am

செய்தி முன்னோட்டம்

அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம், 'லியோ'. விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம்,தொடக்கம் முதலே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், வரும் செப்டம்பர்-30ஆம் தேதி, திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் என விஜய் நற்பணி மன்றத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார். படக்குழுவிடம் இருந்து இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், பாடல் வெளியீட்டு விழா பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியான வண்ணம் இருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு, படத்தின் தயாரிப்பு குழுவான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.

card 2

அரசியல் தலையீடு தான் உண்மையான காரணமா?

இசை வெளியீடு ரத்தானதற்கு காரணம், ஏராளமானோர் நுழைவு சீட்டுகளை கேட்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் ரத்து செய்யப்படுவதாகவும், அரசியல் அழுத்தம் போன்ற வேறு எந்த காரணங்களும் இல்லை என தயாரிப்பு தரப்பு குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், லியோ படத்தின் விநியோகத்தை உரிமை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு வழங்கவில்லை என்பதால், இசை வெளியீட்டிற்கு, அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஏற்கனவே, நடிகர் விஜய்க்கும், உதயநிதிக்கும் மனக்கசப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது அதற்கேற்றாற்போல, தயாரிப்பு தரப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது, பலரும் இதன் பின்னால் அரசியல் காரணம் இருக்குமென்ற சந்தேகம் வலுவாக இருப்பதாக கூறுகின்றனர். அதன் காரணமாக தற்போது இணையத்தில், '#We Stand With Leo' என்கிற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.