NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / செப்., 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா: கட்டுப்பாடுகள் விதிப்பு
    செப்., 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா: கட்டுப்பாடுகள் விதிப்பு
    பொழுதுபோக்கு

    செப்., 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா: கட்டுப்பாடுகள் விதிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    September 18, 2023 | 04:31 pm 1 நிமிட வாசிப்பு
    செப்., 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா: கட்டுப்பாடுகள் விதிப்பு
    செப்., 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா: கட்டுப்பாடுகள் விதிப்பு

    விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என விஜய் நற்பணி மன்ற தலைவர், புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, இதில் கலந்துகொள்ள, மாவட்டந்தோறும், விஜய் ரசிகர்களுக்கு நுழைவு சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இதில் கலந்துகொள்ள வருகை தரவுள்ள ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. அதன்படி, இசை வெளியீட்டு விழாவுக்கு நற்பணி மன்ற நிர்வாகிகள் 200 பேர் அழைக்கப்பட உள்ளதாகவும், இவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சொந்த வாகனங்களில் ரசிகர்கள் விழாவில் பங்கேற்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாம். அதேபோல, விழா அரங்கின் வெளியே பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லியோ போஸ்டர் ஃபீஸ்ட்

    இந்த நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது. நேற்று '#லியோபோஸ்டர்ஃபீஸ்ட்' (#leoposterfeast) என பதிவிட்டு, தெலுங்கு பதிப்பின் போஸ்ட்டரை வெளியிட்டனர். தினம் ஒரு போஸ்டர் வீதம் வெளியிடப்போவதாகவும் நேற்று அறிவித்தனர். அதன் படி, இன்று மாலை, லியோ படத்தின் கன்னட பாதிப்பு போஸ்டர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் மலையாளம் மற்றும் ஹிந்தி போஸ்டர்களை வெளியிட்டு, படத்தை பற்றிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்பதன் அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது. 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இசை வெளியீடு
    விஜய்

    சமீபத்திய

    ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்: ஒரு அலசல் ராஜ்யசபா
    Sports Round Up : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்; வாலிபால் அணி அபாரம்; டாப் விளையாட்டுச் செய்திகள் மகளிர் கிரிக்கெட்
    மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில்  நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா
    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் இந்தியா டேவிஸ் கோப்பை

    இசை வெளியீடு

    சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்  சென்னை
    "முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்" விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ் விஜய்
    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்

    விஜய்

    வெளியானது நடிகர் விஜய்யின் 'லியோ' குறித்த அப்டேட்  லோகேஷ் கனகராஜ்
    லியோ: இங்கிலாந்தில் சென்சார் போர்டு அறிவுறுத்திய மாற்றங்களின்றி, முழுப்படமும் வெளியாகிறது  லோகேஷ் கனகராஜ்
    'லியோ' படத்தின் அடுத்த அப்டேட் - புஸ்ஸி ஆனந்த்  அனிருத்
    ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கோலிவுட்டின் ஸ்டார் கிட்ஸ் இடம்பெறுவார்கள் எனத்தகவல் கோலிவுட்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023