Loading...
திரையுலகின் புதுமைப் பித்தன் மறைந்தார்! அபூர்வ சகோதரர்கள் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்
புகழ்பெற்ற இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்

திரையுலகின் புதுமைப் பித்தன் மறைந்தார்! அபூர்வ சகோதரர்கள் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 04, 2026
09:44 am

செய்தி முன்னோட்டம்

இந்திய திரையுலகின் முன்னோடி இயக்குநரும் புதுமையான படைப்புகளுக்குப் பெயர் பெற்றவருமான சிங்கீதம் சீனிவாச ராவ் (94) சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி சாதனை படைத்த இவரது மறைவு செய்தி தென்னிந்தியத் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கமல்ஹாசன்

கமல்ஹாசனுடன் இணைந்து உருவாக்கிய வரலாற்று மைல்கற்கள்

புகழ்பெற்ற கே.வி.ரெட்டியின் மாயாபஜார் படத்தில் உதவி இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய இவர், பிற்காலத்தில் முன்னணி இயக்குநராக உருவெடுத்தார்.

உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இவர் உருவாக்கிய திரைப்படங்கள் இந்திய சினிமாவின் முக்கிய மைல்கற்களாக அமைந்தன.

குறிப்பாக வசனங்களே இல்லாமல் முழுக்க முழுக்க பின்னணி இசையை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட பேசும் படம் பெரும் பாராட்டைப் பெற்றது.

மேலும் அபூர்வ சகோதரர்கள் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்கள் மூலம் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தினார்.

சிங் கீதம்

விருதுகளும் சிங் கீதம் கடைசிப் படமும்

தெலுங்கில் முதல் டைம் டிராவல் திரைப்படமான ஆதித்யா 369 மற்றும் மயூரி போன்ற முக்கிய படைப்புகளை இவர் வழங்கியுள்ளார்.

தேசிய திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள் மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளை வென்றுள்ள இவருக்கு, இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்தது.

90 வயதைக் கடந்த நிலையிலும் சினிமா மீதான காதலைக் கைவிடாத இவர், அண்மையில் சிங் கீதம் என்ற தனது 61-வது திரைப்படத்தை இயக்கி அனைவரையும் வியக்க வைத்தார்.

ADVERTISEMENT

இரங்கல்

திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்

சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவுக்குத் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியத் திரையுலகில் தொழில்நுட்ப ரீதியாகவும் கதையமைப்பிலும் பல்வேறு சோதனைகளை முதன்முதலில் துணிச்சலாக செய்து பார்த்த ஒரு கலைஞனைத் திரையுலகம் இழந்துவிட்டது எனப் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இவரது மறைவு இந்திய சினிமா வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT