Page Loader
மறைந்த நடிகர் மயில்சாமியின் இறப்பு குறித்து விளக்கம் அளித்த மகன்கள்
மயில்சாமியின் இறப்பு குறித்து விளக்கம் அளித்த மகன்கள்

மறைந்த நடிகர் மயில்சாமியின் இறப்பு குறித்து விளக்கம் அளித்த மகன்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2023
06:59 pm

செய்தி முன்னோட்டம்

மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்களான அன்பு மற்றும் யுவன், ஆகியோர் நேற்று, பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். ஊடக நிருபர்களுக்கு நன்று கூறிவிட்டு, மயில்சாமி இறப்பை குறித்து யூட்யூப்களில் பரவி வரும் தவறான செய்திகள் குறித்தும் கண்டனம் தெரிவித்தனர். " என் அப்பா மறைவின் போது எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி, ஊடகத்தினருக்கும், காவல்துறையினருக்கும் நன்றி. என் அப்பாவின் ரசிகர்கள் என்று சொல்லமாட்டேன், நண்பர்கள் என்று சொல்வேன். இரண்டு நாட்களாக உலகம் முழுவதிலிருந்து இங்கு வந்து நின்றீர்கள். எம்.ஜி.ஆர் ரசிகர்களும் அதிகளவில் வந்திருந்தனர். அவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி". எனக்கூறினர். "ஒவ்வொரு ஊடகத்திலும் ஒவ்வொரு விதமாக செய்தி வந்தது. எனவே உடனிருந்த நான் விளக்கமளிக்கிறேன்,"என தனது தந்தையின் மரணம் குறித்த விளக்கத்தை அளித்தார் மயில்சாமியின் மகன்.

மயில்சாமி

அன்றிரவு நடந்தது என்ன?

"கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோவிலிருந்து, நள்ளிரவு 2.30மணிக்கு வீட்டிற்கு வந்தோம். சாப்பிட்டு விட்டு, தொலைக்காட்சியில் செய்தி பார்த்தோம். நான் உறங்கச்சென்றபின், 10 நிமிடத்தில் அம்மா என்னை அழைத்தார், மூச்சு விட அப்பாவிற்கு சிரமமாக இருப்பதாக சொன்னார்". "உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். நான்தான் கார் ஓட்டினேன். திடீரென என் மேல் சாய்ந்து விட்டார். என்னால் தொடர்ந்து கார் ஓட்ட இயலவில்லை. பின்பு ஆட்டோ உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்". "ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இருந்தபோதும், எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என்று நினைத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்து சென்றேன். அங்கு பரிசோதித்த மருத்துவர்களும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்," எனக்கூறினார்.