மறைந்த நடிகர் மயில்சாமிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி
முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று(பிப்.,19) அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் அவரின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அவரது பூதவுடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், "மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். ஒவ்வொருமுறை கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலையில் இருந்து எனக்கு போன் செய்வார். மயில்சாமி சிவராத்திரி அன்று இறந்தது தற்செயல் கிடையாது. அது சிவனின் கணக்கு. தன்னுடைய தீவிர பக்தரை சிவராத்திரி அன்று சிவபெருமான் அழைத்து சென்று விட்டார். சிவன் கோவிலில் நான் பால் அபிஷேகம் செய்ய சொல்லியதாக நான் கேள்வி பட்டேன். மயில்சாமியின் கடைசியை ஆசையை நிறைவேற்றுவேன்," என்றார்.
மயில்சாமி மறைவு சமூகத்திற்கே இழப்பு!
நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி
சிவ பக்தனான மயில்சாமி, சிவராத்திரி அன்றே இறைவனடி சேர்ந்த சோகம்
தமிழ் திரைப்படங்களில், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் மயில்சாமி. சிறந்த சிவபக்தராக அறியப்பட்ட மயில்சாமி, நேற்று முன்தினம் இரவு கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் சிவன் கோவிலில் நடந்த சிவராத்திரி விழாவில், டிரம்ஸ் சிவமணியுடன் கலந்து கொண்டுள்ளார். அதிகாலை 3 மணி அளவில் வீடு திரும்பியவருக்கு, மாரடைப்பு ஏற்பட்டு, இறந்துவிட்டார். அவரின் இந்த திடீர் இறப்பு, திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது. தான் வழிபடும் சிவனுக்கு, ரஜினியின் கையால் பாலபிஷேகம் செய்விக்க வேண்டும் என்பது தான் அவரது ஆசை என பலர் கூறிய நிலையில், அதை தான் நிறைவேற்றுவதாக ரஜினிகாந்த், நிருபர்களிடம் கூறியுள்ளார். மறைந்த நடிகர் மயிலசாமியின் தகனம் இன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.