சென்னையில் வெள்ளத்தால் பாதித்த 200 குடும்பங்களுக்கு நேரில் நிதியுதவி அளித்த கேபிஒய் பாலா
செய்தி முன்னோட்டம்
சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நேரில் நிவாரண உதவிகளை கேபிஒய் பாலா வழங்கி வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு(கேபிஒய்) நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பாலா, தற்போது பிரபலமடைந்து சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.
இலவச ஆம்புலன்ஸ் வழங்குவது போன்ற மக்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வரும் பாலா, தற்போது சென்னை பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவி வருகிறார்.
இந்நிலையில் பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் மழை பாதித்த 200 குடும்பங்களுக்கு, பாலா தலா ₹1,000 நிதியுதவி வழங்கியுள்ளார்.
"வந்தாரை வாழவைக்கும் சென்னை, என்னையும் வாழ வைத்தது. அந்த ஊருக்கு என்னால் இயன்றவற்றை நான் செய்து வருகிறேன்" என பாலா தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹2 லட்சம் வழங்கிய பாலா
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு நேரில் சென்று நிதியுதவி அளித்துள்ளார் பாலா. வகையில் சமீபத்தில் Kpy பாலா அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்பல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000… pic.twitter.com/HS2q8SATit
— Ramesh Bala (@rameshlaus) December 7, 2023