Page Loader
ரஜினி முதல் கமல் வரை: ரசிகர்கள் இயக்கிய படங்களின் ஒற்றுமை
தன் ரசிகனால் இயக்கப்பட்ட கோலிவுட் நடிகர்கள்

ரஜினி முதல் கமல் வரை: ரசிகர்கள் இயக்கிய படங்களின் ஒற்றுமை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 19, 2023
09:00 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், தங்கள் ரசிகர்களை மனதில் வைத்து தான் படங்களை தேர்வு செய்கின்றனர். ஆனால், அந்த ரசிகனே, விருப்பமான ஹீரோவை டைரக்ட் செய்ய நேர்ந்தால்? தனது வெள்ளித்திரை நாயகனை டைரக்ட் செய்து, அதில் வெற்றியும் கண்ட சில டைரக்டர்களுக்கும் சில ஒற்றுமை இருக்கின்றன. Cliffhanger என்று கூறப்படும் படத்தின் இறுதி முடிவை மக்களின் கண்ணோட்டத்தில் விட்டது தான். அப்படி வெளியான படங்களின் பட்டியல்: ரஜினி-கார்த்திக் சுப்புராஜ்: ரஜினியை இயக்குவது அனைவரின் கனவு. அதிலும் அவரின் தீவிர ரசிகனான கார்த்திக் சுப்புராஜிற்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் விடுவாரா? தான் ரஜினியை எவ்வாறெல்லாம் ரசித்தரோ, அப்படி ஸ்டைலிஷாகவும், வலுவான திரைக்கதையின் மூலம் வெற்றி பெற்றார். படத்தின் இறுதியில் ஒரு சஸ்பென்ஸுடன் முடித்திருந்தார்.

கோலிவுட்

மங்காத்தா அஜித் முதல் தெறி விஜய் வரை

கமல்-லோகேஷ் கனகராஜ்: சென்ற ஆண்டு வெளியான வெற்றி படமான கமலின் 'விக்ரம்' படம், அவரது முந்தைய படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டது. படத்தின் விறுவிறுப்பான கதையும், சண்டைக்காட்சிகளும் ரசிக்க வைத்தன. இறுதியில், விக்ரமின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வியோடு படம் முடிக்கப்பட்டது. விஜய்-அட்லீ: விஜய்யின் தீவிர ரசிகரான அட்லீ இயக்கத்தில், தொடர்ச்சியாக விஜய் நடித்திருந்தாலும், குறிப்பாக, அவர்களின் முதல் படமான 'தெறி'யில், கிளைமாக்ஸ் காட்சியில் 'போலீஸ்' விஜய்யின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது சஸ்பென்சாக விட்டிருந்தார். அஜித்-வெங்கட் பிரபு: அஜித்தை ஸ்டைலிஷ் காப்-பாக, நெகடிவ் கதாபாத்திரத்தில், 'மங்காத்தா' படத்தில் நடிக்க வைத்திருப்பார். படத்தின் இறுதியில், அஜித்தின் அடுத்த பிளான் என்ன என்பதை குறிப்பிடாமல் படத்தை முடித்திருந்தார்.