ரஜினிகாந்த் முதல் சமந்தா ரூத் பிரபு, படம் நஷ்டமடைந்தவுடன் சம்பளத்தை திருப்பி அளித்த நட்சத்திரங்கள்
சினிமாவை பொறுத்தவரை, வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றியடையும் நோக்கத்தோடுதான் எடுக்கப்படுகின்றன. ஆனால், பல காரணங்களால், படம், ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல், தோல்வியை தழுவும்போது, அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும், விநியோகத்தர்களுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. சில பெரிய நட்சத்திரங்கள், படத்தின் நஷ்டத்தில் தாங்களும் பங்கு கொண்டு, தங்களின் சம்பளத்தை திருப்பி தந்து, தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் உதவும் நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடந்துள்ளன. அப்படி, தாங்களாக முன்வந்து இதை செய்த சில பிரபல நட்சத்திரங்கள்: ரஜினிகாந்த்: ரஜினிகாந்தின் தயாரிப்பில், அவர் எழுதிய படம் பாபா. தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இதை எழுதியதாக செய்திகள் உண்டு. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. அதற்காக படத்தின் விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தார் ரஜினி.
நடிகைகளும் தங்கள் சம்பளத்தை திருப்பி தந்துள்ளனர்
விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி, படம் வெளியான பிறகு தயாரிப்பாளர்களுக்கு உதவதற்கு பதில், படம் வெளியாகுமுன்னரே நிதி பற்றாக்குறையினால் கஷ்டப்படும் தயாரிப்பாளர்களுக்கு, தன்னுடைய சம்பளத்தை தியாகம் செய்துவிடுவாராம். சிந்துபாத், 96 போன்ற படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டபோது, விஜய் சேதுபதி இதை செய்தாராம். சாய் பல்லவி: இவர் நடித்த தெலுங்கு படம் ஒன்று எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை என்றது, தானாகவே முன் வந்து, தயாரிப்பாளரிடம் தனது சம்பளத்தை திருப்பி கொடுத்தார் சாய் பல்லவி. சமந்தா: சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சாகுந்தலம். இந்த படம் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு, சமந்தாவும் தன்னுடைய சம்பளத்தில் ஒரு பாதியை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்துவிட்டார் என செய்திகள் கூறுகின்றன.