'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் தீபிகா-ரன்வீர் பகிர்ந்து கொண்ட ரகசியங்கள் என்ன?
செய்தி முன்னோட்டம்
'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்ற, பாலிவுட் ஜோடிகள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், அவர்களின் திருமண வாழ்வு குறித்தும், காதல் வாழ்க்கை குறித்தும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் எட்டாவது சீசனின் முதல் எபிசோடில், திருமணத்திற்கு பின் முதல்முறையாக இந்நிகழ்ச்சியில் தீபிகா-ரன்வீர் ஜோடியாக பங்கேற்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ராம்லீலா படப்பிடிப்பின் போது பழகத் தொடங்கிய இருவரும், 2018 ஆம் ஆண்டு திருமண வாழ்க்கையில் இணைந்தனர்.
ஆனால் திருமணம் ஆவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே, 2015 ஆண்டில் இவர்களுக்குள் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக தற்போது தெரிவித்துள்ளனர்.
2nd card
"நாங்கள் மற்றவர்களை காதலிக்க தடை இல்லை"- தீபிகா
தீபிகாவும், ரன்வீரும் நெருங்கி பழகி வந்தாலும், அவர்களுக்குள் மற்றவர்களை காதலிக்க எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என தீபிகா அந்த பேட்டியின் போது கூறியது, தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது .
அவர்கள் இருவரும் வேறு நபர்களுடன் பழகவும் காதலிக்கவும் வாய்ப்புகள் இருந்தபோதிலும், இருப்பினும் தாங்கள், ஒருவருக்கொருவருக்காக மீண்டும் திரும்பி வந்ததாக தீபிகா தெரிவித்துள்ளார்.
"நான் மற்றவர்களைச் சந்தித்தேன், ஆனால், அவர்கள் மீது எனக்கு ஆர்வம் வரவில்லை"
"என் மனதிற்குள், நான் அவனுடன் கமிட்டெட்டாக இருந்தேன். அதனால் தான், மற்றவர்களுடன் பழக நேர்ந்தாலும், ஆழ்மனதில் இவருடன் (ரன்வீர்) உடன் நான் கமிட்டெட்என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்ததால், மீண்டும் அவரை தேடி வந்துவிடுவேன்" என தீபிகா தெரிவித்துள்ளார்.
card 5
சர்ச்சையை ஈர்த்த தீபிகாவின் கருத்துக்கள்
பின்கதை: தீபிகா படுகோன், ரன்பிர் கபூரை காதலித்து வந்தார். ஆனால், அந்த காதலில் உண்மை தன்மை இல்லை எனவும், தன்னை ரன்வீர் ஏமாற்றி விட்டார் என குற்றம் சுமத்தியும் தான், தீபிகா அவரை பிரிந்தார்.
அதன் பின்னர் சிறிது காலம் சிங்கிளாக வாழ்ந்த தீபிகா, எந்த ஒரு உறவிலும் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தி கொள்ள தயங்கியதாகவும், எனினும் காதலிப்பதை நிறுத்தவில்லை எனவும் தற்போது கூறியது மேலும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ரன்வீர் சிங் உடன் டேட்டிங் செய்த போது, வேறு ஆண்களுடன் தான் பழகியதாக தீபிகா கூறியதை, நெட்டிஸின்கள் கண்டித்து வருகின்றனர். தீபிகா, ரன்வீருக்கு உண்மையாக இருக்கவில்லை எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
3rd card
மாலத்தீவுகளில் காதலைச் சொன்ன ரன்வீர்
கடந்த 2015 ஆம் ஆண்டு தீபிகா படுகோன்-இடம் தனது காதலை, மாலத்தீவுகளில் சொன்னதாக நடிகர் ரன்வீர் தற்போது தெரிவித்துள்ளார்.
"என் காதலை சொல்வதற்காக, என் தங்கை மற்றும் என் தாயிடம் பரிசீலித்த பின்னர், ஒரு வைர மோதிரத்தை வாங்கினேன். அது அந்த காலகட்டத்தில் என் சக்திக்கு மீறியது" எனவும் கூறியிருந்தார்
மாலத்தீவுகளில், கடலுக்கு நடுவில் ஒரு மணல் திட்டில், தன் காதலை ரன்வீர் சொன்னதாகவும், இந்த ப்ரோபோசல்-ஐ, தீபிகா முடியாது என்று சொல்லக்கூடாத அளவுக்கு, மெனக்கட்டதாக கூறியுள்ளார்.
4th card
தோல்விகள் குறித்து பேசிய ரன்வீர்
தனது திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை அடைந்து வருவதை குறித்து நடிகர் ரன்வீர், இந்த நிகழ்ச்சியில் பேசினார்.
சர்க்கஸ் திரைப்படத்தில் தொடங்கிய இவரது தோல்விகள், இந்தியா ஒரு நாள் உலக கோப்பையை வென்றதை தழுவிய படமான, '83 , ஜெயேஷ்பாய் ஜோர்தார் என அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தது.
"கொரோனாவிற்கு பின் '83 நல்ல திரைப்படமாக அமைந்தது. திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, முக்கியமான வெளிநாட்டு சந்தைகளை நாங்கள் இழந்து விட்டோம்" என தெரிவித்தார்.
மேலும் நடந்த எல்லாவற்றிற்கும் பிறகு, அவர் முன்பிருந்ததை விட அதிக நன்றியுடன் இருப்பதாக பேசியிருந்தார்.