Page Loader
அட்லீ தயாரிக்கும் புதிய படம்: வருண் தவணுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்
அட்லீ தயாரிக்கும் புதிய படம்: வருண் தவணுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

அட்லீ தயாரிக்கும் புதிய படம்: வருண் தவணுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 14, 2024
03:14 pm

செய்தி முன்னோட்டம்

கீர்த்தி சுரேஷ், அட்லீ தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில், பாலிவுட் நடிகர் வருண் தவணுடன் அவர் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்கான அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 'ஜவான்' படம் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்த அட்லீ, தனது மனைவி ப்ரியாவுடன் இணைந்து படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார். முதல் படமே பாலிவுட் திரைப்படம் தான். இப்படம் அட்லீ இயக்கத்தில் வெளியான 'தெறி' படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இன்னும் டைட்டிலையோ, ரீமேக் குறித்தோ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் இப்படத்தின் பூஜை சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த வீடியோவை தான் அட்லீ தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

அட்லீ தயாரிக்கும் புதிய படம்