Loading...
கார்த்திக் சுப்பராஜின் 10-வது படம் 'டோரதி': கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இசையமைக்கிறார் இளையராஜா; ரிலீஸ் தேதி அறிவிப்பு
கார்த்திக் சுப்பராஜின் 10-வது படம் 'டோரதி'

கார்த்திக் சுப்பராஜின் 10-வது படம் 'டோரதி': கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இசையமைக்கிறார் இளையராஜா; ரிலீஸ் தேதி அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 05, 2026
08:52 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் தனது 10-வது திரைப்படத்திற்கு 'டோரதி' எனத் தலைப்பிட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் உலகளவில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக உலகப் புகழ்பெற்ற டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) இதன் உலகளாவிய முதல் திரையிடல் நடைபெறவுள்ளது.

குழு

நட்சத்திர பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் குழு

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தில், சனாந்த் மற்றும் ரிஷிகாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கார்த்திக் சுப்பராஜின் தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இதனைத் தயாரிக்கின்றன.

எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் சிவா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.

இத்திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

பல ஆண்டுகளாகத் தான் இயக்க நினைத்த, மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு கதையை இசைஞானியின் இசையமைப்பில் உருவாக்குவது தமக்குக் கிடைத்த பெருமை என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT