LOADING...
கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்திற்கு U/A சான்றிதழ்; வெளியீட்டு தேதி உறுதி
கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்திற்கு U/A சான்றிதழ்

கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்திற்கு U/A சான்றிதழ்; வெளியீட்டு தேதி உறுதி

எழுதியவர் Venkatalakshmi V
Dec 10, 2025
01:41 pm

செய்தி முன்னோட்டம்

கார்த்தி மற்றும் கிருத்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் தமிழ் படமான வா வாத்தியார் படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. நலன் குமாரசாமி இயக்கியுள்ள இந்தப் படம் டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும். இந்த செய்தியை தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர், சான்றிதழை உறுதிப்படுத்தும் ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டது.

திரைப்பட விவரங்கள்

'வா வாத்தியார்' படத்தில் கார்த்தி போலீஸ்காரராக நடித்துள்ளார்

'வா வாத்தியார்' படத்தில், கார்த்தி அதிரடியான ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் நேரடியாக தமிழில் அறிமுகமாகும் கிருத்தி ஷெட்டி, "ஆவிகளுடன் பேசுபவர்" வேடத்தில் நடிக்கிறார். கார்த்தியின் துணை அதிகாரியாக கருணாகரனும், துணை வேடங்களில் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், ஜி.எம். சுந்தர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

ட்ரெய்லர்

'வா வாத்தியார்' ட்ரெய்லர் அரசியல் சதியை குறிக்கிறது

சமீபத்தில் வெளியான 'வா வாத்தியார்' படத்தின் டிரெய்லர், அரசியல் சதியில் சிக்கிக் கொள்ளும் கார்த்தியின் கதாபாத்திரத்தை பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. 2 நிமிடம் 20 வினாடிகள் நீளமுள்ள இந்த கிளிப்பில் அவர் MGR போல குதிரையில் சவாரி செய்வது அல்லது சாட்டையைப் பிடிப்பது போன்ற காட்சிகள் அவரது கதாபாத்திரத்திற்கு ஒரு தனித்தன்மையைக் கொடுக்கின்றன. படத்தின் ஒளிப்பதிவை ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் கையாள, வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அனல் அரசு சண்டைக்காட்சிகளை இயக்கியுள்ளார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement