Page Loader
கார்த்தி-நலன் குமாரசாமி படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் துவக்கம்
கார்த்தியின் அடுத்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது

கார்த்தி-நலன் குமாரசாமி படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் துவக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 28, 2023
09:31 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் கார்த்தி தற்போது 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, நலன் குமாரசுவாமி படத்தில் நடிக்க போகிறார் எனக்கூறப்பட்டது. அதை போலவே, நேற்று (மார்ச் 27) அன்று படத்தின் பூஜை, எளிமையான முறையில் நடைபெற்றது என செய்திகள் கூறுகின்றன. இந்த படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கார்த்தியின் 26 -வது படமான, இந்த திரைப்படம், ஒரு கமர்ஷியல் படமாக எடுக்க போகிறார்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெயரிடப்படாத இந்த படத்தில், அனு இம்மானுவேல் ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடன், விஜய் மில்டன், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கப்போகிறார்கள். படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

கார்த்தி-நலன் குமாரசாமி இணையும் புதிய படம்