Page Loader
நீக்கப்பட்ட காட்சிகள் உடன் 'மெய்யழகன்' இன்று முதல் ஓடிடியில் ரிலீஸ்!
'மெய்யழகன்' இன்று முதல் ஓடிடியில் ரிலீஸ்

நீக்கப்பட்ட காட்சிகள் உடன் 'மெய்யழகன்' இன்று முதல் ஓடிடியில் ரிலீஸ்!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 25, 2024
10:35 am

செய்தி முன்னோட்டம்

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம், இன்று, அக்டோபர் 25ஆம் தேதி ஓடிடியில் அதிகாரபூர்வமாக ஸ்ட்ரீம் ஆகிறது. 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், ஜோதிகா-சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது, மற்றும் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக, கோவிந்த் வசந்தா இசையில், கமல் குரலில் வெளியான 'யாரோ இவன் யாரோ' பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் வெளியீட்டில் நீளம் அதிகமாக இருந்ததால், 18 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. இப்போது, அந்தக் காட்சிகளுடன் இன்று இப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post