"நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி": கார்த்தி பெருமிதம்
'மாமன்னன்' படத்திற்குப்பிறகு மாரி செல்வராஜ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வாழை'. இப்படம் அவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ப்ரீ-ரிலீஸின் போதே பல இயக்குனர்கள் மாரியின் படைப்பை குறித்து பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டிருந்தனர். கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் சிறப்பு திரையிடல் சமீபத்தில் நடந்தது. படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூரி, இயக்குனர் பாலா உள்ளிட்ட பலரும் மாரி செல்வராஜிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் கார்த்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தின் மூலம் தனது பாராட்டை பதிவு செய்துள்ளார். அதில்,"ஒரு திரைக்காவியமாய் படைத்து அதில் நம்மை உள்ளிழுத்து நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி" எனத்தெரிவித்துள்ளார்.