Page Loader
16 வருடங்களை நிறைவு செய்த கார்த்தி: அவரின் கோலிவுட் பயணத்தை பற்றிய சிறு குறிப்பு
கோலிவுட்டில் 16 வருடங்களை நிறைவு செய்த கார்த்தி

16 வருடங்களை நிறைவு செய்த கார்த்தி: அவரின் கோலிவுட் பயணத்தை பற்றிய சிறு குறிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2023
12:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராகவும், திறமையான நடிகராகவும் அறியப்படும் கார்த்தி, திரையுலகில் கால் பதித்து இன்றுடன் 16 வருடங்கள் ஆகிறது. 'பருத்திவீரன்' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர், தற்போது வரை 24 படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த படங்களில் ஒரு சில படங்கள் தோல்வியை கண்டாலும், அநேக படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவை. அவரின் திரையுலக பயணத்தை பற்றி ஒரு சிறு குறிப்பு இதோ: மணிரத்னத்தின் உதவியாளராக தனது கலைப்பயணத்தை துவங்கிய கார்த்தி, முதன் முதலில் கேமரா முன் தோன்றியது, மணிரத்னத்தின் இயக்கத்தில், தனது அண்ணன் சூர்யாவுடன் 'ஆயுத எழுத்து' படத்தில் சிறிய வேடத்தில் தோன்றினார்.

கார்த்தி

கார்த்தியின் திரைப்பயணம்

2007 ஆம் ஆண்டு, பிப்ரவரி 23 தேதியன்று வெளியான 'பருத்தி வீரன்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். முதல் படமென்று தெரியாத அளவிற்கு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்திய கார்த்தி, தொடர்ந்து, பையா, நான் மகான் அல்ல போன்ற வெற்றி படங்களில் நடித்து, கமர்ஷியல் ஹீரோவாக தன்னை நிலைநாட்டிக்கொண்டார். இதற்கு நடுவில், 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற எஸ்பிரிமெண்டல் படங்களிலும் நடித்து, தனது நடிப்பு தாகத்திற்கு தீனி போட்டுக்கொண்டார். 'மெட்ராஸ்', 'கொம்பன்' போன்ற வித்தியாசமான கதைக்களத்தில் வெற்றிகளை தந்தவர், 'தோழா' படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களையும் ஈர்த்தார். 'தீரன் அதிகாரம் ஒன்று', 'கைதி' படங்களின் மூலம் ஆக்க்ஷன் ஹீரோவாக களமிறங்கிய கார்த்தி, 'பொன்னியின் செல்வன்' என்ற சரித்திரக்கதையில் நடித்து, பலரின் பாராட்டை பெற்றுள்ளார்.