பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன்
1950-ம் ஆண்டில் வார இதழில் தொடர்கதையாக வெளிவரப்பட்ட புதினம் பொன்னியின் செல்வன். இந்த புத்தகம் பிரபல எழுத்தாளர் கல்கி அவர்களால் எழுதப்பட்டது. கி.பி. 1000 நூற்றாண்டை சேர்ந்த சோழ நாட்டு பேராசை பற்றி கற்பனை கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புனைவாகும். இதற்கு மக்களிடம் கிடைத்த ஆதரவினால் அடுத்தடுத்து பல பதிப்புகள் வெளிவந்தன. இந்த புத்தகத்தை மையமாக கொண்டு மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் படத்தை எழுதி இயக்கினர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம், கார்த்தி,ஜெயம்ரவி, த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்றோர் நடித்துள்ளனர்.
சன் டிவியில் வெளியாகிறது பொன்னியின் செல்வன்
2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படம் பெரும் எதிர்பார்ப்புவுடன் திரையரங்குகளில் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிசில் சுமார் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. இப்படத்தின் இரண்டாம் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி தளத்திற்கான உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ பெற்றது. மேலும் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் நெட்ஒர்க் பெற்று இருந்தது. தற்போது இப்படத்தினை சன் தொலைக்காட்சி பொங்கல் விடுமுறையொட்டி வருகிற 8-ந்தேதி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. ஞாயிற்று கிழமையன்று மாலை 6.30 மணிக்கு இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.