Page Loader
1000 திரையரங்குளில் ரீ ரிலீஸாகும் கமலின் ஆளவந்தான்! குஷியில் ரசிகர்கள்;
1000 திரையரங்கில் ரீ ரீலிஸ் ஆகும் ஆளவந்தான் திரைப்படம்

1000 திரையரங்குளில் ரீ ரிலீஸாகும் கமலின் ஆளவந்தான்! குஷியில் ரசிகர்கள்;

எழுதியவர் Siranjeevi
Jan 25, 2023
05:59 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில், தற்போது பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து அதை ட்ரெண்டாக்கி வருவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், மக்களை கவரும் விதமாக 22 ஆண்டுகளுக்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான ஆளவந்தான் படமும் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக கூறியுள்ளனர். பழைய படங்களையும் மக்கள் கொண்டாடி ஆர்வமாக பார்க்க திரைக்கு வருகின்றனர். சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில், கமல், மனிஷா கொய்ராலா, ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடிப்பில் ஆளவந்தான் திரைப்படம் 2001 இல் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஆளவந்தான்

ரீ ரீலிஸ் செய்யப்படும் கமலின் ஆளவந்தான் திரைப்படம்

மேலும், உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் வெளியிடப்படுகிறது. இந்த படத்தின் ரீரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் ஒன்றில் கவனம் பெற்று வருகிறது. இதன் மூலம் பிரம்மாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் தமிழ் படம் என்கிற சாதனையை ஆளவந்தான் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன், ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட்டான பாபா திரைப்படம் கடந்த மாதம் அவரது பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்டது. இந்த படத்தையும், ஆளவந்தான் படத்தையும் இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.