
நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை, நடிகர் கிருஷ்ணா சிலையை திறந்து வைத்தார் கமல்ஹாசன்
செய்தி முன்னோட்டம்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கட்டமனேனி கிருஷ்ணா சிலையை, நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.
குருநானக் காலனியில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
இந்தியன் 2 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக, கமல்ஹாசன் ஆந்திரா சென்றிருந்த நிலையில், இந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்றார்.
கிருஷ்ணா என்று அழைக்கப்படும் கட்டமனேனி சிவராம கிருஷ்ண மூர்த்தி, தெலுங்கு திரையுலகில் 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்த கிருஷ்ணாவிற்கு கடந்த 2009 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி, உடல்நிலை பிரச்சனை காரணமாக கிருஷ்ணா ஹைதராபாதில் உயிரிழந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற கமலஹாசன்
#WATCH | Kamal Haasan unveils statue of veteran Telugu actor Krishna in Andhra Pradesh's Vijayawada pic.twitter.com/7fpKFWcaYT
— ANI (@ANI) November 10, 2023