Page Loader
கமல்-233 படத்திற்கு 'தலைவன் இருக்கிறான்' என டைட்டில் வைக்க முடிவு?
கமல்-233 படத்திற்கு 'தலைவன் இருக்கிறான்' என டைட்டில் வைக்க முடிவு ?

கமல்-233 படத்திற்கு 'தலைவன் இருக்கிறான்' என டைட்டில் வைக்க முடிவு?

எழுதியவர் Nivetha P
Oct 23, 2023
01:57 pm

செய்தி முன்னோட்டம்

'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து கமல்ஹாசன் தற்போது மும்முரமாக 'இந்தியன் 2' மற்றும் 'ப்ராஜெக்ட்-கே' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே கமலின் 233 மற்றும் 234வது படங்கள் குறித்த பேச்சுக்கள் உலாவர துவங்கியது. அதன்படி கமலின் 233வது-படத்தினை அவர் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து நடிக்கவுள்ளார் என்றும், இப்படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இப்படத்திற்கு 'தலைவன் இருக்கிறான்' என்று டைட்டில் வைக்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கொரோனா காலத்திற்கு முன்னர் கமல் ஏஆர் ரஹ்மான் உடன் இணைந்து இதேத்தலைப்பில் ஓர் அரசியல் பின்னணியுடைய படத்தினை துவக்கினார். ஆனால் அப்படம் கைவிடப்பட்ட நிலையில் இப்படத்திற்கு அத்தலைப்பினை வைக்க கமல் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

கமலின் 233வது திரைப்பட அப்டேட்