Page Loader
காக்க காக்க 20: ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார் சூர்யா
காக்க காக்க 20!

காக்க காக்க 20: ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார் சூர்யா

எழுதியவர் Venkatalakshmi V
Aug 02, 2023
09:40 am

செய்தி முன்னோட்டம்

'காக்க காக்க' திரைப்படம் வெளியாகி நேற்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்த படம் இன்றும், சூர்யாவின் திரையுலக பயணத்தில் முக்கியமான திரைப்படம் என்பது மறுப்பதற்கில்லை. கம்பீரமான போலீஸ் வேடத்தில் முதன்முறையாக நடித்திருந்தார் அவர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட். அதுமட்டுமின்றி, இப்படம் சூர்யாவிற்கு தனிப்பட்ட முறையிலும் மிகவும் ஸ்பெஷல். காரணம், இப்படத்தில் அவர் நடிக்க வேண்டும் என பரிந்துரைத்தது ஜோதிகா தான். இப்படத்தின் ஷூட்டிங்கின் போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது எனவும் செய்திகள் உண்டு. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்துள்ளார் நடிகர் சூர்யா.

ட்விட்டர் அஞ்சல்

'காக்க காக்க' BTS