
"காதல் பாலினம் சார்ந்தது அல்ல, இதயம் சார்ந்தது": காதல் என்பது பொதுவுடமை பட போஸ்டர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு, 'லென்ஸ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். தொடர்ந்து 'தி மஸ்கிட்டோ பிலாசபி' என்ற படத்தை இயக்கியிருந்தார்.
சில தினங்களுக்கு முன்னர் வெளியான 'தலைக்கூத்தல்' படத்தின் மூலம் பலரது கவனத்தை பெற்ற ஜெயபிரகாஷ், தற்போது 'காதல் என்பது பொதுவுடமை' என்ற படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் பிரதான வேடத்தில்,'ஜெய் பீம்' படத்தில் நடித்த லிஜோமோல் நடிக்கிறார். அவருடன், ரோகிணி, வினித் மற்றும் தீபா மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
அதை ஜோதிகா வெளியிட்டார். உடன்,"காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்தது அல்ல, அது இரண்டு இதயம் சார்ந்தது. காதலையும் அன்பையும் மட்டுமே மதித்து காதலர் தினத்தை கொண்டாடுவோம்" என குறிப்பிட்டிருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
நடிகை ரோகிணியின் ட்விட்டர் பதிவு
Happy to share pic.twitter.com/Nxk8yVIDrW
— Rohini Molleti (@Rohinimolleti) February 14, 2023