KGF இயக்குனர் பிரஷாந்த் நீல் உடன் கை கோர்க்கும் RRR நாயகன் Jr NTR
செய்தி முன்னோட்டம்
ஆஸ்கார் விருதை வென்ற RRR படத்தில், ஹீரோவாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் Jr NTR.
இன்று அவரது பிறந்தநாளை ரசிகர்களும், திரையுலகினரும் கொண்டாடி வரும் வேளையில், அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Jr NTRஇன் 31-வது திரைப்படமாக அமையப்போகும் படத்திற்கு, தற்காலிகமாக '#NTR 31' என பெயரிட்டுள்ளனர்.
அந்த திரைப்படத்தை இயக்கவிருப்பது, KGF படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரபாஸுடன், சலார் என்ற படத்தை இயக்கி வரும் பிரஷாந்த் நீல், தொடர்ந்து KGF படத்தின் அடுத்த பாகத்தை இயக்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கைவசம் இருக்கும் படங்களை முடித்து விட்டு Jr NTR உடன் கைகோர்க்க போகிறார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Jr NTR -ன் 31வது படத்தை KGF பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்குகிறார்#JrNTR | #HappyBirthdayNTR | #PrashanthNeel | #NTR31 pic.twitter.com/xdP7GIaj3A
— PTPrime (@pttvprime) May 20, 2023