மோகன்லால் காட்சிகளை வெட்டியது நியாயமில்லை! ஜெயிலர் 2 படக்குழுவை வெளிப்படையாக விமர்சித்த ஆடை வடிவமைப்பாளர்; முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 15) அன்று திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த முக்கியமான காட்சிகள் மற்றும் தோற்றங்கள் வெட்டப்பட்டதாக அவரது தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் 3
3 பிரத்யேக தோற்றங்கள் நீக்கம் மற்றும் ஜெயிலர் 3 புறக்கணிப்பு
இன்ஸ்டாகிராம் பதிவில் பேசிய ஜிஷாத் ஷம்சுதீன், "படப்பிடிப்பின் போது நாங்கள் வடிவமைத்த ஆடைகள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது.
ஆனால் படம் வெளியான பிறகு, மோகன்லால் சாருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 3 வித்தியாசமான தோற்றங்கள் படத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
டிரெய்லரில் காட்டப்பட்ட சிறிய காட்சியும் கூட வெட்டப்பட்டுள்ளது. மோகன்லால் போன்ற ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டாரின் காட்சிகளைக் குறைப்பது முற்றிலும் தேவையற்ற செயல்.
அடுத்த பாகம் உருவானால் அதில் நான் கண்டிப்பாகப் பணியாற்ற மாட்டேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Lalettan’s costume designer Jishad Shamsudeen expresses his disappointment over #Mohanlal’s scenes being cut from #Jailer2. 💔
— Film Wood Fiscal (@FilmWoodFiscal) October 15, 2026
Three distinct looks were removed entirely, and even the trailer scene was trimmed out. Truly disappointing. pic.twitter.com/wQ8ezXF4UX
ரசிகர்கள் ஆதரவு
ரசிகர்களின் கொந்தளிப்பும் ஆதரவும்
ஜிஷாத்தின் இந்தப் பதிவைத் தொடர்ந்து, மோகன்லால் ரசிகர்கள் பலரும் படக்குழுவிற்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
திரையரங்கில் லேலேட்டனின் (மோகன்லால்) திரையிருப்பு மிகவும் குறைவாக இருந்தது ஏமாற்றமளிக்கிறது என்றும், முறையான கதாபாத்திரம் கொடுக்க விருப்பமில்லை என்றால் வெறும் 5 வினாடி காட்சிக்கு அவரை ஏன் அழைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், படக்குழுவிற்கு பயப்படாமல் உண்மையை வெளிப்படையாகப் பேசிய ஆடை வடிவமைப்பாளரின் தைரியத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கதாப்பாத்திரம்
ஜெயிலர் 2 திரைப்படத்தில் மோகன்லாலின் மேத்யூ கதாபாத்திரம்
2023-இல் வெளியான ஜெயிலர் முதல் பாகத்தில் ரஜினிகாந்தின் நண்பராக மேத்யூ என்ற கடத்தல்காரர் கதாபாத்திரத்தில் மோகன்லால் கெஸ்ட் ரோலில் வந்து மாஸ் காட்டியிருந்தார்.
ஜெயிலர் 2 இரண்டாம் பாகத்திலும் அதே ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் அவர் மீண்டும் வந்துள்ளார்.
இருப்பினும், அவருக்காக படமாக்கப்பட்ட பல முக்கியக் காட்சிகள் படத்தொகுப்பின் போது நீக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார், மலையாள சினிமா ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.