ராகவா லாரன்ஸ், SJ சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் X ட்ரைலர் வெளியானது
கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக 'மகான்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். விக்ரம், தருவ் விக்ரம் நடித்திருந்த இந்த திரைப்படம் சுமாராகவே ஓடியது. அதன் பின்னர் 'ஜிகர்தண்டா டபுள் X' என்ற படத்தை இயக்கத்தொடங்கினார். ராகவா லாரன்ஸ், மற்றும் S.J.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்கள் வெளியான நிலையில், படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே 'ஜிகர்தண்டா' என்ற பெயரில் தேசிய விருது வென்ற படத்தை எடுத்திருந்த கார்த்திக் சுப்புராஜ், தற்போது மீதும் அதேபோன்றதொரு கதை களத்தை கையில் எடுத்துள்ளார் என்பது ட்ரைலரை பார்த்ததும் தெரிகிறது. மதுரையில் ரௌடியாக ராகவா லாரன்ஸ், இயக்குனராக எஸ்.ஜே.சூர்யா. அதன் பின்னர் நடப்பதுதான் மீதி கதை.