
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'ஜிகர்தண்டா டபுள் X' படத்தின் டீசர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜிகர்தண்டா'.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் 2ம் பாகமான 'ஜிகர்தண்டா டபுள் X' தயாராகியுள்ளது.
இதில் சித்தார்த் கதாபாத்திரத்தினை எஸ்.ஜே.சூர்யாவும், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தினை ராகவா லாரென்ஸும் ஏற்று நடித்துள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் உள்ள சுவாரஸ்யமான இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், இதன் டீசர் தற்போது இணையத்தில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
டீசர் பதிவு
#JigarthandaDoubleX
— karthik subbaraj (@karthiksubbaraj) September 11, 2023
Teaser:https://t.co/jZHVaTFRAc
"A Pandyaa Western" Story
XXing In Theatres this Diwali #APandyaaWestern#JigarthandaDoubleXTeaser#DoubleXDiwali@offl_Lawrence @iam_SJSuryah @dop_tirru @Music_Santhosh@kaarthekeyens @stonebenchers @NimishaSajayan…