Loading...
மீண்டும் இணையும் ஜெயராம் - சிம்ரன் ஜோடி: இயக்குநர் கௌதம்ராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
ஜெயராம் - சிம்ரன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

மீண்டும் இணையும் ஜெயராம் - சிம்ரன் ஜோடி: இயக்குநர் கௌதம்ராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

எழுதியவர் Vasuki
Oct 03, 2026
09:58 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ஆர்யா மற்றும் தி ஷோ பீப்பிள் வழங்க, எஸ்.ஒய். கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. 'ராட்சசி' உள்ளிட்ட கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய எஸ்.ஒய். கௌதம் ராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை நடிகர் ஆர்யாவின் 'தி ஷோ பீப்பிள்' மற்றும் 'ஒயிட் கார்பெட் ஃபிலிம்ஸ்' இணைந்து வழங்குகின்றன.

ஜெயராம் - சிம்ரன் ஜோடி

படப்படிப்பு தொடக்கம்

'ஒயிட் கார்பெட் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் 4-வது தயாரிப்பாக (#WhiteCarpetFilmsProductionNo4) உருவாகும் இப்படத்தை, அந்நிறுவனத்துடன் இணைந்து 'ரெடாக்டட் ஸ்டுடியோஸ்' தயாரிக்கிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் திறமை வாய்ந்த நட்சத்திரங்களான ஜெயராமும் சிம்ரனும் மீண்டும் ஒரு படத்தில் ஜோடியாக இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் பங்கேற்ற புகைப்படங்களை வெளியிட்டு படப்பிடிப்பு தொடங்கியதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

இப்படத்திற்கு சித்தார்த் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள, கண்ணதாசன் மற்றும் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணியாற்றுகின்றனர்.

படத்தின் தலைப்பு, கூடுதல் நடிகர்கள் மற்றும் கதைக்களம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT